Posts

மகிழ்வின் விடியல்

 தன் நிறைவையும் பாதுகாப்பையும் போலவே, இன்னொருவரின் பாதுகாப்பும், நிறைவும் ஒருவருக்கு முக்கியமாகும் போது, அங்கே அன்பு நிகழ்கிறது. -- ஹாரி ஸ்டாக் சல்லிவன் ஒருவர் இன்னொருவர்பால் காட்டும் செயலாக்கமான அக்கறையே அன்பு -- எரிக்பிராம் இத்தகைய அன்பின் மிக நெருக்கமான வடிவமே திருமண அன்பு. ஒரு ஆணும், பெண்ணும், நிலையான அன்பின்பால் இணைவதே திருமணம். என்மீது நான் கொண்டுள்ள அக்கறையும், உன்மீது எனக்குள்ள அக்கறையும் ஒன்றே எனும் உணர்வே திருமண அன்பு.